இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனதை உடைக்கும் வல்லமை

படம்
அன்றாட வாழ்க்கையின் அங்கமாய் மின்தொடர்வண்டி பயணம் ஆகிவிட்ட பிறகு... சுமார் முக்கால் மணி நேரம் நீடிக்கும் பயணத்தில், வாசிப்பில் அமிழ்ந்து கிடக்கையிலோ, இசையில் மூழ்கி திளைக்கையிலோ, குட்டி தூக்கத்தில் குளிர் காயும் பொழுதிலோ, தொடர்வண்டிக்கு தொடர்பற்று திரியும் மனதை உடைக்கும் வல்லமை பார்வை திறனற்றவரின் குரலுக்கும், திருநங்கைகளின் கைதட்டும் ஓசைக்கும் வாய்த்ததெப்படி என விளங்கவே இல்லை.....

ஸ்னோடென் - அமெரிக்காவை அலற வைத்தவர்.

படம்
இது   ஒருவரின்   பெயர் .   இவர்   புரட்சிகாரர்   இல்லை .   கம்யுனிஸம்   பேசவில்லை .   எந்த   நாட்டின்   விடுதலைக்காகவும்   குரல் கொடுக்கவில்லை .   ஆனால்   அனேகமாய்   ஒரு   தனி   மனிதனை   அமெரிக்கா   கொலைவெறி   கொண்டு   தேடும்   முதல்   நபர் இவர்தான் .   இந்த   தனிமனிதனுக்கு   எதிராக   சீனா,   ரஷ்யா   போன்ற   வளர்ந்த   நாடுகளை   மிரட்டும்   அளவுக்கு   அமெரிக்கா சென்றுள்ளது . வேறொன்றுமில்லை. கொஞ்ச   நாட்களுக்கு   முன்பாக   விக்கிலீக்ஸ்   இணையதளம்   எப்படி   அமெரிக்காவின்   ரகசியங்களை வெளியிட்டதோ   அதே   போல   இவரும்   ஒரு   தகவலை   வெளியிட்டார். அவ்வளவு   தான். ஆனால்   அந்த   ஒற்றைத் தகவலுக்குள்   ஒளிந்திருக்கிறது   உலகின்   சர்வாதிகாரி   யார்   என்பதற்கான   பதில். உலகில்   பெருகி   வரும்   சமூக   வலைதளங்களில்   செயல்படும்   ஒவ்வொரு   தனிமனிதனையும்   அமெரிக்க   உளவுத்துறை கண்காணித்து   வருகிறது   என்பதே   அந்த   தகவல். சும்மா   இருக்குமா   சர்வதேச   சண்டியர்   அமெரிக்கா…?? சல்லடை   போட்டு   சலிக்கிறது   உலகை. ஸ்னோடென்னுக்காக. ஒளித்து   வைத்திருந்தால்   கடும்   விளைவுகளை  

கிழக்கிந்திய முதலாளித்துவமும் கேடானதே!

- அருணன் நூலின் மூன்றாம் பகுதிக்கான தலைப்பே பரபரப்பானது. அது : “மார்க்ச்சுக்கும், மார்க்கெட்டுக்கும் அப்பால் உலகத்துக்கான முன் மாதிரி”. இந்திய அரசியலில் மூன்றாவது மாற்று பற்றிப் பேசப்படுவது போல உலக சமூகக் கட்டமைப்பிற்கு ஒரு மூன்றாவது மாற்றைப் பரிந்துரைக்கிறார் எஸ்.குருமூர்த்தி. தலைப்பைப் பார்த்தால் இது சோசலிசமும் அல்ல, முதலாளித்துவமும் அல்ல என்பது போலப்படும். ஆனால் முத்தாய்ப்பாக இவர் கூறுவது “நமக்குத் தேவை முறைசாரா அமைப்புகளோடு இணைந்து செயலாற்றக் கூடிய ஒரு சந்தை. அது மட்டுமே நிலைத்து நிற்கும்” என்பதுதான். சந்தை என்று இவர் கூறுவது முதலாளித்துவத்தையே என்பதைக் கண்டு வந்தோம். அதிலே ஒரு வகையைத் தான் மனிதர் பரிந்துரைக்கிறார். ஆக, இது மூன் றாவது மாற்றே அல்ல. ஏற்கனவே இருக்கிற முதலாளித்துவ அமைப்பில் ஒரு முக்கிய மாறுதலையே கோருகிறார்.அது என்னவெனில் “முறைசாரா அமைப்பு களோடு இணைந்து செயலாற்றக்கூடிய” தன்மை முதலாளித்துவத்திற்கு வேண்டும். அதுதான் அமெரிக்க பாணி முதலாளித்துவத் திடம் இல்லை என்கிறார். அப்படியெனில், “முறைசாரா அமைப்புகள்” என்று இவர் எவற் றைச் சொல்லுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.மனி

எதிர்ப்பது மேற்கத்திய முதலாளித்துவத்தையே!

- அருணன் நூலின் முதல் பகுதியில் “மறைந்து போன மார்க்சியம்” பற்றிப் பேசிய எஸ். குருமூர்த்தி இரண்டாம் பகுதியில் “மங்கி வரும் மார்க்கெட்டு” பற்றி பேசுகிறார். முதலாளித்துவத்தைக் குறிக்கவே இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அது பொருத்தமானது அல்ல. “மார்க்கெட்” - சந்தை - எனப்படுவது விற்கிறவரும், வாங்குகிறவரும் சந்திக்கும் இடம். அது முதலாளித்துவத்தின் கண்டு பிடிப்பு அல்ல. வெள்ளைக்காரர்கள் இங்கே வருவதற்கு முன்பே வாரச்சந்தை, மாதச் சந்தை என்று கூடியதை தமிழர் களாகிய நாமறிவோம். ஆண்டான் - அடிமை யுகம் காலத்திலிருந்து இருக்கக் கூடிய சந்தையை ஏதோ முதலாளித் துவத்தின் கண்டுபிடிப்பு போலச் சொல்லி, அதை மார்க்சியர்கள் இப்போது தான் அங்கீகரித்திருக்கிறார்கள் என்பது போல எழுதிச் செல்கிறார். இரண்டுமே தவறு.முதலாளித்துவத்தின் தனித்தன்மை சந்தையில் இல்லை; அது ஆலைமுறை என்கிற புதிய உற்பத்தி முறையிலும், அதற் கான மூலதன ‘உருவாக்கத்திலும்’ அதைத் தனியுடைமையாகக் கொண்ட முதலாளிகள் என்கிற புதிய வர்க்கம் பிறந்ததாலும், அதன் மறுபக்கமாக உழைப்பையே சொந்தமாகக் கொண்ட தொழிலாளர்கள் எனும் மற்றொரு புதிய வர்க்கம் உதயமானதில

மார்க்ஸ் இவர்களை இப்போதும் மிரட்டுகிறார்!

- அருணன் திருவாளர் எஸ். குருமூர்த்தி “மறைந்து போன மார்க்சியமும், மங்கி வரும் மார்க்கெட்டும்” என்றொரு நூல் எழுதியிருக்கிறார். “கிழக்கு” பதிப்பகத் தின் இந்த வெளியீட்டில், “அரசியல், பொருளாதார விமர்சகர்” என்று இவர் குறிப்பிடப்பட்டுள்ளார். ஏதோ பொதுவான மனிதர் போன்ற பிம்பத்தைக் காட்டும் வார்த்தைகள்! உள்ளே தனது முன்னு ரையில் “சுதேசி விழிப்புணர்வு இயக்க நண்பர்கள்” பற்றிக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். அந்த இயக்கம் ஆர்.எஸ். எஸ்.சின் துணை அமைப்பு என்பதை அறிந்து கொண்டால் இவர் எப்படிப்பட்ட வர் என்பதைச் சட்டென்று புரிந்து கொள்ளலாம்.மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த நூலின் முதல்பகுதியில் “லெனின், ஸ்டா லின், சிலைகளைப் போல மார்க்சும் ஒரு பழமைச் சின்னமாகவும் பயன் ஒழிந்து போன மனிதராகவும் ஆகிவிட்டார்” என்று உற்சாகமாகப் பிரகடனப்படுத்தியிருக் கிறார் மனிதர். அது மட்டுமா? இதற்கான காரணத்தையும் அரிய கண்டுபிடிப்பாய் வெளியிட்டிருக்கிறார். அது “காரல் மார்க்ஸ் பழமையாகிப் பயனற்றுப் போன தற்கு மார்க்சைவிட மார்க்சிஸ்டுகளே காரணம்”. பயனற்றுப் போனவர் பற்றி இந்த அதிமேதாவி ஏனிப்படி வரிந்து கட் டிக்கொண்டு ஆங்கிலத்தில் நூல

சுயநிர்ணய உரிமை - தொடரும் விவாதங்கள்

-டி.கே.ரெங்கராஜன் இலங்கைத் தமிழர் பிரச்னை, இந்த நூற்றாண்டின் பெரும் துயரம்' என்பது வேதனையான உண்மை. அதிகாரம், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை, சிங்கள மேலாதிக்க ஆட்சியாளர்களால், இலங்கையின் பாரம்பரியத் தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டது. இந்த அடிப்படை உரிமைகளுக்காக, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அமைதி வழியில் போராடியவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலை உருவானதற்கு சிங்கள மேலாதிக்கம்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. 2009-இல் ஏற்பட்ட மிகப்பெரிய நாசத்திற்குப் பின் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தங்களின் உரிமைகளை நிலைநாட்டிடவும், வாழ்க்கைத் தேவைகளுக்காகவும் இன்றும் இலங்கைத் தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். "சமரசம் என்பது ஒரு தவறான சொல்' என்று கருதலாகாது என விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் குறிப்பிட்டார். இந்த அணுகுமுறையை புலிகள் இயக்கத்தினரும் பின்பற்றி இருக்கலாமோ என்ற கருத்தைப் பலர் வெளிப்படுத்தி இருப்பது தமிழ்ச் சமூகம் நன்கு அறிந்த ஒன்று. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் உருவாக இருந்த பல சமரசத் தீர்வுகள் தட்டி விடப்பட்டது

சுட்டெரிக்கும் வெயிலிலும் மக்களுக்காக களம் கண்டோம் மாற்றுக் கொள்கை வெல்ல இன்னும் சக்தியாக எழுவோம்!

படம்
-ஜி.ராமகிருஷ்ணன்  மே - 24 அன்று மாநிலம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 402 மையங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறியலில் கலந்து கொண்டனர். கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், வாலிபர்கள், மாணவர்கள் என அனைத்துப் பகுதியினரும் போராட்டத்தில் பங்கேற்றனர். மறியலில் கலந்து கொண்ட நகர்ப்புற, கிராமப்புற உழைப்பாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒரு நாள் ஊதிய இழப்பு பற்றி கவலைப்படாமல் கைதாகினர். இதில் 4-இல் ஒரு பகுதியினர் பெண்கள். 202 குழந்தைகளுடன் பெண்கள் மறியல் களம் கண்டது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசினுடைய நாசகரப் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து மாற்றுக் கொள்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இயக்கத்தை நடத்தவுள்ளது. 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நான்காண்டுகள் முடித்து கடந்த மே 23ம் தேதி ஒரு “சாதனைப் பட்டியலை” வெளியிட்டது. எல்லாத்துறைகளிலும் ஆஹா, ஓஹோ என்று வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இத்தகைய வள

அரசியல் அற்றதாக்கும் அரசியல்...

தமிழ்நாட்டில் அதிகரித்த்திருக்கும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான மாணவர் போராட்டங்கள் கவனிக்கத் தக்கதாய் மாறியிருக்கிறது.. அல்லது மாற்றப்பட்டிருக்கிறது.. இதற்கு முன்னும் தமிழகத்தில் மாணவர் போராட்டங்கள் இதே வீச்சோடு நடைபெற்றிருந்த போதிலும் இந்த போராட்டத்தின் தன்மை மிக ஆழமாக கவனிக்கத் தக்கதாய் இருக்கிறது.. இந்த போராட்டம் ஒரு அரசியலற்ற போராட்டம் என மீண்டும் மீண்டும் உரத்து சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.. ஆச்சர்யமாய் இருக்கிறது... அத்தோடு இயற்கைக்கு முரணாகவும் உள்ளது.. அரசியலற்ற ஒரு போராட்டம் எப்படி ஒரு அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை வென்றெடுக்க முடியும்..??? உண்ணும் உணவிலிருந்து உறங்க உதவும் படுக்கை வரை யாவற்றிலும் அரசியலே நிறைந்திருக்கும் போது அரசியலற்று எப்படி ஒரு அரசியல் போராட்டம் முன்னேற முடியும்...??? உண்மையில் இந்த போராட்டம் அரசியல் அற்றதாய் இல்லை.. ஆனால் அரசியல் அற்றதாக்க படுகிறது... அது தான் அவர்களின் விருப்பமும் கூட... இப்படி ஒரு போர்க்குனமிக்க பெருங்க்கூட்டம் அரசியலுக்குள் வந்து விடக்கூடாது என்ற அவர்களின் கவனம் மிக அசிங்கமாக அம்பலப்படுகிறது...