இடுகைகள்

மார்ச், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கேளா செவிகள் கேட்க செய்திட....

அணி திரட்டபடாத தொழிலாளர்கள் குறித்து நாம் தொடர்ந்து பேசி கொண்டு இருக்கிறோம்... தொழிற்சாலைகளில், அரசு நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு என பேசுவதற்கு அவரவர்க்கான தொழிற்சங்கங்கள் இருப்பது போல அல்லாமல் எந்த சமூக பாதுகாப்பும் இன்றி, எந்த தொழிற்சங்க பாதுகாப்பும் இன்றி அங்காடி தெருக்களில் இருக்கிற லட்சகணக்கான தொழிலாளர்கள் குறித்து கவலையும் அக்கறையும் கொள்வோருக்கான செய்தி இது.... சாத்தூரில் எட்டுர்வட்டம் அருகே தங்க நாற்கர சாலையில் அமைக்கப்பட்டுள்ள tolegate ல் பணிபுரியும் தொழிலாளர்கள் tolegate ன் காண்ட்ராக்ட் மாறிய ஒரே காரணத்தால் இரண்டு நாள்களுக்கு முந்திய காலையில் வீதியில் வீசி எறியப்பட்டனர்... மார்க்சிஸ்ட் கட்சி, CITU , புதிய தமிழகம் உள்ளிட்ட அமைப்புகள் தலை இட்டு tolegate அலுவலகத்தை முற்றுகை இட்டதின் விளைவாக தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது... போராட்டத்தில் பங்கேற்ற citu மாவட்ட பொது செயலாளர் தோழர் முத்துவேல் அவர்களிடம் tolegate ஊழியர் சங்கம் அமைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்... அதற்க்கான நடவ

செவ்வணக்கம் தோழா.......

சிவகாசி அருகே விபத்தில் சிக்கி ஒரு இளைஞன் இறந்து போனான் என்றொரு செவி வழி செய்தி நேற்று மாலை கிடைத்தது... உடன் விருதுநகர் மாவட்ட dyfi ரத்த தான கழக செயலாளர் தோழர் விக்டரை தொடர்பு கொண்டு கேட்க... "ஆமாம் தோழர் நம்ம பையன் தான், மறியலில் கைதாகி விட்டதால் இப்போது தான் போய் கொண்டு இருக்கிறேன்.." என்றார்... மீண்டும் இரவில் தோழர் விக்டரோடு பேசினேன்... இறந்து போன இளைஞன் பெயர் கருத்தபாண்டி. வயது 24 2007 ல ... ் dyfi ல் இணைந்து சிவகாசி நகர் முனிஸ்வரன் காலனி கிளையில் செயல்பட்டு வந்தவர்.. அமைப்பில் இணைந்தது முதல் தொடர்ந்து மிக சரியாக 3 மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்து வந்திருக்கிறார்... திருமணம் செய்து ஒரு வருடம் ஆகிறது... கடைசியாக கடந்த 23 .3 .2012 மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தன்று dyfi ரத்த தான கழக வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு 24 ம் தேதி ரத்த தானம் செய்திருக்கிறார்... இப்படியாக தோழர் விக்டர் அவரை பற்றி சொல்லி கொண்டே இருந்தார்... மரணத்தின் மீது உச்சபட்ச வெறுப்பு என்னிடம் இருந்து உமிழ்ந்தது... இதுவரை அந்த தோழனை ஒருமுறை கூட நேரில் பார்த்தது இல்லை.

குழப்பம்...

காதல் கல்வி இந்த இரண்டையும் தவிர மிக தெளிவாக திட்டமிட்டு குழப்பி விடப்பட்டவை வேறொன்றும் இல்லை....       

சூன்யத்திலிருந்து வந்ததல்ல மத்திய பட்ஜெட்...

படம்
-வெங்கடேஷ் ஆத்ரேயா சந்திப்பு: அ. குமரேசன் பட்ஜெட் என்றால் டிவி விலை உயர்கிறது, கார் விலை விலை குறைகிறது என்ற தகவல்களோடு மட்டும் பொதுவாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஆனால் அரசின் வர்க்கக் குணம், மக்கள் மீது சுமைகளை ஏற்றும் சாமர்த்தியம் என ஆழமான பல அம்சங்கள் அதனுள் இருக்கின்றன. உண்மையிலேயே நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறை வேற்றப்படும் வரவு - செலவு அறிக்கையின் அடிப்படையில் தான் ஆண்டு முழுவதும் நடவடிக்கை கள் மேற்கொள்ளப் படுகின்றனவா? மாநில அரசுகளை மத்திய பட்ஜெட் எந்த அளவுக்கு பாதிக்கும்? பட்ஜெட் பற்றிய மேலோட்டமான தகவல்களுக்கு அப்பால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய உண்மைகள் என்ன? நிதி மூலதனத்தை ஊக்குவிக்கிற கொள்கைதான் செயல்படுத்தப்படுகிறது என்றாலும், அந்த நிதி மூலதனம் என்பது நேரடியாக இல்லாவிட்டாலும், சுற்றி வளைத்து ஏதோ ஒரு வகையில் பொருள் உற்பத்தி சார்ந்த முதலீடாகத்தானே போய்ச்சேர்கிறது? இந்த கேள்வி களுடன் அணுகியபோது பொருளாதார ஆய்வாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான வெங்கடேஷ் ஆ

கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க ஒத்துழைப்பீர்! எதிர்ப்பாளர்கள் மீது அடக்குமுறையை அரசு கைவிட வேண்டும் : சிபிஎம்

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது அடக்குமுறை களை கைவிடவும், அணுமின்நிலையம் இயங்க மக்கள் ஒத்துழைக்கவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டு கோள் விடுத்துள்ளது.இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மத்திய, மாநில அரசுகள் நியமித்த நிபுணர் குழுக்களின் அறிக்கை அடிப்படையில், மின்உற்பத்தி தொடங் கிட தமிழ்நாடு அரசு முடிவு மேற் கொண்டது. இந்த முடிவை வரவேற்ற தோடு, கூடங்குளம் அணுமின் நிலையத் தில் மின் உற்பத்தியை தொடங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியிருந்தது. இதற்கு அனைத் துப்பகுதி மக்களும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால், கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப் பாளர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப் பைத் தெரிவித்து வருகின்றனர். கூடங்குளம்அணுமின் நிலையத்தின் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அச்சம் தெரிவிக்கும் மக்களுக்கு அணுமின் நிலைய பாது காப்பு அம்சங்கள் குறித்து தெளிவு படுத்தி

இன்குலாப் ஜிந்தாபாத்

படம்
இந்திய விடுதலை போரில் தேசமெங்கும் வீறிட்டு துடித்த கோடான கோடி நரம்புகளை தன் உயிர் கொண்டு முறுக்கேற்றிய.... ஒரு விசை குறையாத வீரனின் நினைவு தினம்.... நீ பிறந்து, வளர்ந்து, நடமாடிய அதே தேசத்தில் நானும் திரிகிறேன் நீ சுமந்த அதே கனவுகளை சுமந்து கொண்டு.... கனவுகள் ஒன்றாய் இருப்பினும், நீ விட்டு சென்ற இலக்கே எனது கண்களிலும் தெரிந்திடினும், உன்னிடம் இருந்த வீரியம் எம்முள் மழுங்கி போனது ஏன்..? எப்படி..? குடும்பம், பொருளாதாரம், ஆசை, காதல் என எனது மனம் மட்டும் சுருங்கி போனது எப்படி...? லட்சியத்தை சொல்லி கொடுத்த உனது வல்லமை பொருந்திய வாழ்க்கையிலிருந்தே அதையும் கற்றுகொள்வேன் என்ற நம்பிக்கையோடும்.. உறுதியோடும்... முஷ்டி உயர்த்தி, அடித்தொண்டையிலிருந்து முழங்குகிறேன்... " இன்குலாப் ஜிந்தாபாத் "