இடுகைகள்

மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுட்டெரிக்கும் வெயிலிலும் மக்களுக்காக களம் கண்டோம் மாற்றுக் கொள்கை வெல்ல இன்னும் சக்தியாக எழுவோம்!

படம்
-ஜி.ராமகிருஷ்ணன்  மே - 24 அன்று மாநிலம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 402 மையங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறியலில் கலந்து கொண்டனர். கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், வாலிபர்கள், மாணவர்கள் என அனைத்துப் பகுதியினரும் போராட்டத்தில் பங்கேற்றனர். மறியலில் கலந்து கொண்ட நகர்ப்புற, கிராமப்புற உழைப்பாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒரு நாள் ஊதிய இழப்பு பற்றி கவலைப்படாமல் கைதாகினர். இதில் 4-இல் ஒரு பகுதியினர் பெண்கள். 202 குழந்தைகளுடன் பெண்கள் மறியல் களம் கண்டது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசினுடைய நாசகரப் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து மாற்றுக் கொள்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இயக்கத்தை நடத்தவுள்ளது. 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நான்காண்டுகள் முடித்து கடந்த மே 23ம் தேதி ஒரு “சாதனைப் பட்டியலை” வெளியிட்டது. எல்லாத்துறைகளிலும் ஆஹா, ஓஹோ என்று வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இத்தகைய வள