இடுகைகள்

ஆகஸ்ட், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

துப்பாக்கிகள் அடங்கியிருக்கும் இப்போதேனும்...

என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் என்ன பேசிக்கொண்டிருந்தாலும் மனதின் பின் திரையில் சத்தமில்லாத ஒரு மௌனப்படமாக இலங்கையில் தமிழ் மக்கள் கதறியழுவதும் பெண்கள் இருகரம் விரித்து வானத்தை நோக்கிக் கதறிப் பேசுவதும் லாரிகளிலிலிருந்து அன்று கொன்ற ராணுவத்தினர் இன்று நீட்டும் உணவுக்காகக் கைகள் ஏந்தி மக்கள் வெறித்து நிற்பதும் என ஒரு காட்சி சதா ஓடிக்கொண்டே இருக்கிறது.குற்ற உணர்வும் வலியும் இயலாமையின் துக்கமும் மாறி மாறி மனதில் அலையடித்துக்கொண்டே இருக்கிறது. சுனாமியில் கணவன்,குழந்தைகள் என எல்லோரையும் இழந்துவிட்ட அந்த லட்சுமி அம்மாள் அன்று கடற்கரையில் நின்று கடலோடு உரத்துப் பேசிக்கொண்டிருந்த காட்சியும் கூடவே அலையடிக்கிறது. எல்லோராலும் கைவிடப்பட்ட (உன்னாலும் கூடத்தான் என்று உள்ளிருந்து குரல் கேட்கிறது) ஒரு சமூகம் அங்கே முகாம்களில் (அது என்ன லட்சணத்தில் இருக்கிறதோ) அலைபாய்ந்து கொண்டும் அடைபட்டும் கிடக்கிறது.இங்கே தமிழகத்திலேயே அகதிகள் முகாம்கள் கோழிகள் அடைக்கப்பட்டிருந்த ஷெட் களில்தான் முதலில் அமைக்கப்பட்டன என்பது நினைவுக்கு வருகிறது.ஆண்டுகள் பலவாக செருப்பில்லாத கால்களுடன் குரைக்கும் துப்பாக்கிகளுக்கு இடை