இடுகைகள்

நவம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
வரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணி ஆர். நல்லகண்ணு காலச்சக்கரத்தை திரும்பிப் பார்க்கிறேன் சரியாக 37 ஆண்டுகள். வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் 37 ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம். நேற்று நடந்தது போல இருக்கிறது. தஞ்சாவூர் அருகே அன்று நடந்த கொடுமையை இன்று நினைத்தாலும் நெஞ்சில் குருதி வடிகிறது. இந்தியாவில் நடைபெற்ற உக்கிரமான கொடுமைகளை பட்டியலிட்டால் கீழ வெண்மணி கொடுமையும் ஒன்று. அன்று நடந்த கொடுமையை நான் வாசகர்களுக்கு பதிவு செய்கிறேன். 1968 டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை ஏசுநாதர் பிறந்த நாள் விழா உலகெங்கும் கொண்டாப்படும் திருவிழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடிய இரவாகவும், விடியாத இரவாகவும் அமைந்தது. ஆம் . அன்றிரவு தஞ்சை மாவட்டம், கீழ வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். கருகிச் சாம்பலாக்கப்பட்டனர். இவ்வாறு உயிரோடு தீக்கொழுத்தப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் வேறொன்றுமில்லை. தாழ்த்தப்
“சாதி’’ இந்திய சமூகத்தை, “மேலும் ஆய்வை நோக்கிச் செல்’’ என நிர்பந்திக்கிற வார்த்தை. கார்பன் பரிசோதனையோ, வேறு பரிசோதனைகளோ, “சாதி’’ என்கிற வார்த்தை மீது செல்லுபடி ஆவதில்லை. இ.எம். சங்கரன் என்கிற இ.எம்.எஸ் மார்க்சியத் தத்துவத்தை இந்திய மண்ணில், மண்ணுக்கேற்ற மார்க்சியமாக வளர்ப்பதற்கு முயற்சித்த தத்துவவாதி. ஒருமுறை இ.எம்.எஸ் “நான் முதலில் சீர்திருத்தவாதி, பின் இடதுசாரி, பின் கம்யூனிஸ்ட்’’ என்று, தன் வளர்ச்சியை, தன் சிந்தனை வளர்ச்சியுடன் ஒப்பிட்டு வரையறை செய்திருக்கிறார். கேள்விக் கணைகள் மூளையை கசக்கியதாலேயே, இ.எம்.எஸ் என்கிற மனிதன் மார்க்சியவாதியாக மலர்ந்திருக்கிறார். இ.எம்.எஸ் பிறந்த, வளர்ந்த குடும்பப் பின்னணியை விளக்குவது கட்டுரையின் நோக்கமன்று, ஆனாலும் அவர், நிலையில் உயர்ந்ததாகக் கூறப்படுகிற சாதியில் பிறந்தவர், நிலப்பிரபுத்துவக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இளம் வயதில் தன் வாழ்க்கை மீது அவர் எழுப்பிய கேள்விகளின் விளைவு தான், வேதங்களின் நாடு, இந்திய வரலாறு ஆகிய புத்தகங்கள். சிலர் மார்க்சிஸ்ட் இயக்கத்தை விமர்சிக்க இ.எம்.எஸ். ஏன் நம்பூதிரிபாட் என்ற சாதிய வார்த்த