இடுகைகள்

பிப்ரவரி, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
பெண்ணினம் இருக்கும் திசை நோக்கி…. ”ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்” படத்திற்காகக் கொடுத்த பேட்டி ஜெயராமை சோக ஹஸ்பெண்ட் ஆக்கி விட்டது. ”மலையாளப் படத்தில் வருவது போல நீங்கள் நிஜத்திலும் உங்கள் வீட்டு வேலைக்காரியை “சைட்” அடித்திருக்கிறீர்களா?” என்கிற இந்த நூற்றாண்டின் அதி அத்தியாவசியமான அறிவுபூர்வமான கேள்வியை கேட்டதற்கு பதில் சொல்லப் போய்தான் எக்கச்சக்க சிக்கலில் மாட்டிக்கொண்டு முழித்திருக்கிறார் ஜெயராம். முதலில் இப்படிப்பட்ட கேள்வி கேட்டவரைத்தான் காலில் இருப்பதைக் கழட்டி “கவனித்திருக்க” வேண்டும். ஆனால் தான் ஏற்கெனவே நடித்திருந்த படத்தின் லட்சணமும், அதற்காக கல்லாவில் போட்டுக் கொண்ட காசும் “கண்ணியவானை” அப்படிச் செய்ய விடுமா? ஒரு அயோக்கியத்தனமான கேள்விக்கு மற்றொரு அயோக்கியத்தனமான பதிலை சொல்லப்போய் “சகல மரியாதையும்” கிடைத்திருக்கிறது நடிகருக்கு. அப்புறம் என்ன? “நான் அக்மார்க் தமிழன்.” “கும்பகோணத்துத் தமிழன்” “அய்யோ நான் ஒரிஜினல் தமிழனுங்கோ” எனக் கூப்பாடு மேல் கூப்பாடு போட்டு கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறார். ”ஒரு தமிழச்சியை கறுத்த தடித்த மாடு என்று கொச்சைப்படுத்தலாமா? என்பதுதான் இப்போது பலரின் முன்பாகவ

காதல் செய்வோம்...

பிப்ரவரி இது காதலின் மாதம்... பூக்களும்.... புன்னகையும்... கோபங்களும்... சந்தோசங்களும்... பொங்கி பரவும்... வாழ்த்து அட்டைகளும் கவிதைகளும் காதலை சொல்லும் கருவிகளாகும்..... அன்பால் உலகை அளக்க விரும்பும் எவரும் காதலை கொண்டாடலாம்... பழைய தபு சங்கரின் கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது... "பாவத்தின் சம்பளம் மரணம்.. என்கிறது பைபிள்... புண்ணியத்தின் சம்பளம் காதல் என்கிறது காதல்..." ஆதலால் காதல் செய்வோம்...