இடுகைகள்

ஏப்ரல், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதுவும் மாநாட்டுப் பணிதான்... நிறைவுக்குப்பின் ஊரையே சுத்தம் செய்த மார்க்சிஸ்டுகள்

கோழிக்கோடு நகரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது அகில இந்திய மாநாடு அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது போலவே சுற்றுச்சூழல் குறித்தும் குறிப்பான தாக்கத்தை ஏற்படுத்தியது.மாநாடு நடத்திவிட்டு மறுநாள் அவரவர் வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள் என்பது பொதுவாகச் சொல்லப்படும் கருத்தாகும். இப்படித்தான் கோழிக்கோடு மாநாடு பற்றியும் ஊடகங்கள் எழுதின. பாருங்க,,, குப்பையாக்கி விடுவார்கள் என்று மலையாள மனோரமா உள்ளிட்ட பத்திரிகைகள் கதை விட்டுக் கொண்டிருந்தன. மாநாட்டில், கட்சியின் அரசியல், தத்துவார்த்த மற்றும் ஸ்தாபன அம்சங்கள் பற்றியெல்லாம் நடந்த விவாதங்களை இந்த ஊடகங்கள் மக்களுக்குக் கொண்டு சேர்க்க முயலவில்லை. தேவையற்ற கேள்வி ஒன்றை செய்தியாளர் சந்திப்பின்போது ஒருவர் கேட்டபோது, இதில் எல்லாம் உங்களைப் போன்ற பெரிய பத்திரிகைகள் எப்போதிருந்து கவனம் செலுத்தத் துவங்கின என்று சிரித்துக் கொண்டே அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கேட்டு அந்த செய்தியாளர் சந்திப்பின் திசைவழியை ஒழுங்குபடுத்தினார்.மாநாடு என்று அறிவித்ததிலிருந

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரை நூற்றாண்டு எழுச்சிமிகு வரலாறு - என்.ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரை நூற்றாண்டுக் கால போராட்ட வரலாறை விவரிப்பது என்பது ஒரு பிரம்மாண்டமான கடமையாகும். கடந்த 50 ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் நிறைவேற்றப் பட்ட சில கடினமான கடமைகளை விவரிக்கவே இங்கே முயற்சிக்கப் பட்டுள்ளது.தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உருவாக்கம் பெற்ற 1964ம் ஆண்டிலிருந்து அது மாநில அரசாங்கம், முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக் களின் எண்ணற்ற தாக்குதல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அது தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள் மற்றும் ஊழியர்களை ஆயிரக்கணக்கில் திரட்டி இந்த தாக்குதல்களை தாங்கி நின்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக் கத்தில் பல பிரச்சனைகளை, தத்து வார்த்த, ஸ்தாபன மற்றும் அரசியல் பிரச் சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. மாநில அளவில் ஒன்றாகயிருந்த கட்சித் தலைமையில் திரிபுவாதம் என்பது மிக பலமாக வேரூன்றியிருந்தது. நாம் அதை வெற்றிகரமாக உடைத்து சரியான தத்து வார்த்த வடிவமைப்பு கொண்ட கட்சியை உருவாக்கினோம். பி.ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட்ராமன், ஏ.பாலசுப்ரமணியம், என். சங்கரய்யா, வி.ப