இடுகைகள்

ஜூலை, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நந்தன் நடந்த பாதை

படம்
எழுதியது ச.தமிழ்ச்செல்வன் பத்திரிகைச் செய்தி ” சிதம்பரம் நடராசர் ஆலயத்திற்கு தலித் சமுகத்தின் நந்தன் சென்ற பாதையை மறைத்து அடைக்கப்பட்டுள்ள கதவைத் திறந்திடவும் , தடுப்புச் சுவரை அகற்றிடவும் வலியுறுத்தி புதனன்று (ஜூலை 14) எழுச்சி மிகு போராட்டம் நடைபெற்றது. அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசமைப்பு சாசனத்திற்கு விரோதமாக ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடைப்பை அகற்றுவதற்கு மாறாக , தமிழக அரசின் காவல்துறையினர் அந்தக் கதவை திறக்கக் கோரி போராடியவர்களைக் கைது செய்தனர். நந்தன் சென்ற பாதையில் தாங்களும் நடந்து சென்று இப்போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டார்கள். ” மேற்கண்ட போராட்டத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிதான் நடத்தியது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் அம்முன்னணியின் உயிர்ப்புள்ள ஓர் அங்கம்.நானும் எமது அமைப்பைச் சேர்ந்த படைப்பாளிகள் பலரும் நேற்றைய (14.7.10) மறியலில் பங்கேற்றுக் கைதானோம். இன்று சில தொலைக்காட்சிகளில் அந்தப் பாதைக்கும் நந்தனுக்கும் தொடர்பில்லை.அது வேறு காலம் இது வேறு காலம் என்று வரலாற்று அறிஞர் என்ற

நன்றாய்த் தான் வளர்க்கிறார்கள்... போ!

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக தமிழ் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும்? ரயில் தண்டவாளத்தில் நிற்கும் கைகாட்டி மரமாய் நின்று கொண்டு கடலை போடும் தொகுப்பாளர்களின் தொண்டைச்சிறையில் சிக்கித்தவிக்கும் எம்மொழி தமிழுக்கு எப்போது கிடைக்கும் விடுதலை? பிறந்ததில் இருந்து தாலாட்டுக் கேட்டு வளர்ந்து சாகும் போது ஒப்பாரியோடு முடியும் தமிழனின் வாழ்க்கையில் அன்றாடம் கடக்கும் நான்ஸ்டாப் பாடல்களின் தொல்லையின் எல்லை எது? கேள்விகள் கொசுவர்த்திச்சுருளாய் படம் காட்டுகின்றன. கோலிவுட் படத்தில் பெரும்பாலானோர் தமிங்கிலம் பேச ஹாலிவுட் படத்தில் மிருகம் கூட தமிழ் பேசுகிறது. பசும்பால் குடிக்கும் குழந்தைச்செல்வங்களை விட பசுமாடுகளே இப்போது தமிழை நன்றாக உச்சரிக்கின்றன. குழந்தைகளில் கழுத்தில் தொங்கும் "டை" போல ஊசலாடிக்கொண்டிருக்கிறது ஆரம்பப்பள்ளிகளில் தமிழ். தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் மானியம்.. . .