இடுகைகள்

2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கரசேவை, மசூதி இடிப்பு, அயோத்தி தீர்ப்பு…

படம்
எழுதியவர்   மாதவராஜ்             தீர்ப்பினைக் கொண்டாடும் சாதுக்கள் "இருதரப்பும் சேர்ந்து வாழ்வதை அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது” என்கின்றனர் பலரும் அயோத்தி தீர்ப்பு குறித்து.  பி.ஜே.பி, சாதுக்கள், பஜ்ரங்கதள், வி.எச்.பி மிகுந்த உற்சாகத்தோடு தீர்ப்பை வரவேற்று கொண்டாடுகின்றனர். ‘ ராமருக்கு கோவில் கட்டுவதற்கான வழி பிறந்துவிட்டது’ என்றும், ‘தேசீய ஒருமைப்பாட்டிற்கு புதிய அத்தியாயத்தை இந்த தீர்ப்பு எழுதியிருக்கிறது’ என்றும் அத்வானி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்று அறிக்கை விட்டிருக்கின்றனர். "அயோத்தியில் பிரம்மாண்டமான கோவில் கட்டப்படும்” என பிரவீன் தொகாடியா ஆனந்தக் கூச்சலிடுகிறார். காங்கிரஸ் கட்சி  புன்னகையோடு, “தீர்ப்பை இருதரப்பாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என சொல்லி  வருகிறது. மூஸ்லீம் அமைப்புகள் தீர்ப்பீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்லப்போவதாக சொல்கின்றன.  தீர்ப்பின் உள்ளடக்கத்தையும், சாதக பாதகங்களையும் இந்தக் காட்சிகளும் செய்திகளும் சொல்கின்றன.   ‘முப்பரிமாண தீர்ப்பு’ என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற தீர்ப்புகளை எழுதியிருக்கிற மாண்புமிகு நீதிபதிகள் மூவரும
நம்பிக்கை அடிப்படையிலானது பெரும் ஆபத்து: கி.வீரமணி சென்னை, அக். 1- அயோத்தி தீர்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கி யிருப்பது பெரும் ஆபத்தானது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: மூன்று நீதிபதிகளும் இணைந்து கருத்திணக்கத்தோடு ஒரே தீர்ப்பாக வழங்கவில்லை. மூவரும் தனித் தனியே எழுதி யுள்ளனர். இத்தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள், சட்ட அடிப் படையில் அமைவதைவிட - ‘நம் பிக்கை’ - நீண்ட காலமாக இருந்து வந்த காரணம் என்பது போன்றவைகளால் அமைந்த விசித்திரத் தீர்ப்பாகும்! வல்லடி வழக்குகளும்கூட! “நம்பிக்கை அடிப்படையில்’’ என்றால், யாரும் எதற்கும் ஆதாரமோ, சான்றோ, சட்ட விதிகளையோ தேடித் தேடி வழக் கின் தீர்ப்பை அமைக்க முடியாது - பெருகும் ஆபத்தான முறைக்கு அது வழிவகுக்கும் அபாயம் உள்ளது. அதற்கு இந்த அலகாபாத் தீர்ப்பு ஓர் ‘அருமையான’ ‘விசித்திர’த் தீர்ப்பு! புராண கால கற்பனைகளுக்கும், இதிகாச கால நம்பிக்கை களுக்கும் மதப் பூச்சு பூசப்பட்டதாலேயே வெறும் நம்பிக்கை அடிப்படையில் ராமர் அங்குதான் பிறந்தார் என்றெல்லாம் இதுபோன

செப் - 24

நாளை பாபர் மசூதி குறித்த தீர்ப்பு வெளிவர... நாடு முழுவதும் தொற்றிகொள்ளும் பதற்றம் பழைய கவிதை ஒன்றை நினைவூட்டுகிறது... " அவர்களுக்கு தேவை கோவில்.. இவர்களுக்கு தேவை மசூதி... தேசத்தின் உடனடி தேவை நல்ல கழிப்பிடம்.. . 

புரட்சியின் அடையாளம் தோழர் “சே” -ஐ.வி.நாகராஜன்

படம்
புரட்சிக்கு மிகப்பெரிய அடை யாளங்களில் சேகுவேரா ஒருவர் என்று சொன்னால் யாரும் மறுக்க முடியாது. தனது வாழ்நாள் முழுவ தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற மாவீரன். இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட குடும் பத்தில் பிறந்த சேகுவேரா சிறுவய திலிருந்தே அநீதியைக் கண்டு ஆத்திரம் கொள்பவராக இருந்தார். பணக்கார குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் நண்பனாக வளர்ந் தவர். தன்னுடைய இளம் வயதில் தென் அமெரிக்கா முழுவதும் அவர் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணம் ‘சே’வின் வாழ்க் கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத் தியது. முதலாளித்துவம் மக்களை எவ்வளவு கொடூரமாக பிழிந்தெடுக் கிறது என்பதை கண்கூடாக பார்த் தார். தென் அமெரிக்காவின் பல் வேறு பகுதிகளில் மக்கள் படும் துன்ப துயரங்களை நேரில் சந்தித்த பின்பு இனி புரட்சி மட்டும்தான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தார். இந்த சூழ்நிலையில் பிடல் காஸ்ட்ரோ உடனான அறிமுகம் இதை சாத்தியப்படுத்தியது. காஸ்ட் ரோவுடனான முதல் சந்திப்பில் சர்வதேச அரசியலும், கியூபாவுக் கான திட்டங்கள், அரசியல் நடவ டிக்கைகள் பற்றி பேசினார்கள். பிடல் இந்த சந்திப்பைப்பற்றி குறிப் பிடும்போது புரட்சி பற்ற

நந்தன் நடந்த பாதை

படம்
எழுதியது ச.தமிழ்ச்செல்வன் பத்திரிகைச் செய்தி ” சிதம்பரம் நடராசர் ஆலயத்திற்கு தலித் சமுகத்தின் நந்தன் சென்ற பாதையை மறைத்து அடைக்கப்பட்டுள்ள கதவைத் திறந்திடவும் , தடுப்புச் சுவரை அகற்றிடவும் வலியுறுத்தி புதனன்று (ஜூலை 14) எழுச்சி மிகு போராட்டம் நடைபெற்றது. அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசமைப்பு சாசனத்திற்கு விரோதமாக ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடைப்பை அகற்றுவதற்கு மாறாக , தமிழக அரசின் காவல்துறையினர் அந்தக் கதவை திறக்கக் கோரி போராடியவர்களைக் கைது செய்தனர். நந்தன் சென்ற பாதையில் தாங்களும் நடந்து சென்று இப்போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டார்கள். ” மேற்கண்ட போராட்டத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிதான் நடத்தியது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் அம்முன்னணியின் உயிர்ப்புள்ள ஓர் அங்கம்.நானும் எமது அமைப்பைச் சேர்ந்த படைப்பாளிகள் பலரும் நேற்றைய (14.7.10) மறியலில் பங்கேற்றுக் கைதானோம். இன்று சில தொலைக்காட்சிகளில் அந்தப் பாதைக்கும் நந்தனுக்கும் தொடர்பில்லை.அது வேறு காலம் இது வேறு காலம் என்று வரலாற்று அறிஞர் என்ற

நன்றாய்த் தான் வளர்க்கிறார்கள்... போ!

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக தமிழ் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும்? ரயில் தண்டவாளத்தில் நிற்கும் கைகாட்டி மரமாய் நின்று கொண்டு கடலை போடும் தொகுப்பாளர்களின் தொண்டைச்சிறையில் சிக்கித்தவிக்கும் எம்மொழி தமிழுக்கு எப்போது கிடைக்கும் விடுதலை? பிறந்ததில் இருந்து தாலாட்டுக் கேட்டு வளர்ந்து சாகும் போது ஒப்பாரியோடு முடியும் தமிழனின் வாழ்க்கையில் அன்றாடம் கடக்கும் நான்ஸ்டாப் பாடல்களின் தொல்லையின் எல்லை எது? கேள்விகள் கொசுவர்த்திச்சுருளாய் படம் காட்டுகின்றன. கோலிவுட் படத்தில் பெரும்பாலானோர் தமிங்கிலம் பேச ஹாலிவுட் படத்தில் மிருகம் கூட தமிழ் பேசுகிறது. பசும்பால் குடிக்கும் குழந்தைச்செல்வங்களை விட பசுமாடுகளே இப்போது தமிழை நன்றாக உச்சரிக்கின்றன. குழந்தைகளில் கழுத்தில் தொங்கும் "டை" போல ஊசலாடிக்கொண்டிருக்கிறது ஆரம்பப்பள்ளிகளில் தமிழ். தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் மானியம்.. . .

ஆண்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள், மனிதர்கள் வேறுபாதையில் செல்லவும்....

படம்
1. காலந்தோறும் போர்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன. தேசியப் பெருமிதம், இனமானம், வீரம், எல்லை விரிவாக்கம், கௌரவப்பிரச்னை என்று போருக்கான காரணங்களை ஆட்சியாளர்களும் ஆள விரும்புவோருமே உருவாக்குகின்றனர். உன்னத இலட்சியம் அல்லது அற்பமான கற்பிதம் என்ற இருபுள்ளிகளுக் கிடையே அலைவுறும் எதுவொன்றையும் போருக்கான காரணமாக கட்டமைத்து விட முடிகிறது அவர்களால். உண்மையில் அவர்கள் இருவேறு முகங்கள் கொண்ட ஒருவரே தான். சுண்டிவிடப்படும் நாணயத்தில் பூவோ தலையோ எது விழுந்தாலும் அது போரை தொடங்குவது அல்லது தொடர்வதற்குரிய சமிக்ஞை யாகவே அவர்களது அகராதியில் பொருள் விளக்கம் உள்ளது. எனவே காலமும் களமும்தான் மாறுகிறதேயன்றி போரை அவர்கள் கைவிடுவதாயில்லை. ஆயுதங் களின் மீதான ஈர்ப்பு தவிர்க்கவியலாதபடி தம்மை மனிதவுயிர்கள் மீதான வெறுப்புக்குள் நெட்டித்தள்ளுவதை ஒருபோதும் அவர்கள் உணர்ந்தாரில்லை. முகமும் இருதயமுமற்ற ஆயுதங்களின் முனையில் வழியும் ரத்தத்தால் நிறைகிறது அவர்களது கோப்பை. சொந்தமக்களின் நாவும் குரலுமே போர்க்கடவுள் கோரும் முதற்படையல். எனவே போரின் நோக்கம் எதுவாயினு

செம்மொழி மாநாடு- வரவேற்பும் எதிர்பார்ப்பும்!

-ச.தமிழ்ச்செல்வன் பெரும்பொருட்செலவில் கோவையில் கோலாகலம் என்ற சொல்லுக்குப் புதிய பொருள் தரும் விதமாகத் தமிழக அரசு நடத் தும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு துவங் கிவிட்டது.பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதுமிருந்து வந்து கோவையில் குவிந்துள்ளார்கள்.வெளிநாடுகளிலிருந்தும் பல தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டுக்கு வரு கை புரிந்துள்ளனர்.கோவை மாநகரில் திரும் பும் இடமெல்லாம் மாநாட்டுத் தோரணங்கள், சுவர் ஓவியங்கள் எனக் கோவைத் தெருக் களில் எங்கும் தமிழ் முழக்கம். அந்த மகிழ்ச் சியில் நாமும் பங்கு கொள்கிறோம். கூடும் மக் கள் ஏதோ ஒருவிதமான தமிழ் உணர்வில் தான் கூடுகிறார்கள். வேடிக்கை பார்க்க மட் டும் அல்ல என்றே நம்புகிறோம். “இவ்வளவு ஆடம்பரமும் செலவும் தேவைதானா” என்று 1968இல் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் சென்னை யில் இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு நடந்த போது தந்தை பெரியார் கேட்டார். உலகத்தமிழ் மாநாடென்றால் மொழியின் பல்வேறு துறைக ளில் நடைபெறும் ஆய்வு மாநாடாகத்தானே இருக்க வேண்டும். எதற்கு இந்த ஆடம்பர மான வீண் செலவு என்பதுதான் தந்தை பெரி யாரின் கேள்வி.ஆனால் மக்கள் மயப்படுத்தப் பட

நக்சல்பாரிகளிடம் கொள்கைத் தெளிவு இல்லை: உ.ரா.வரதராஜன்

படம்
நேர்காணல்: மினர்வா & நந்தன் கல்லூரிக் காலத்திலேயே அரசியல் ஈடுபாடு கொண்டவர். ரிசர்வ் வங்கியில் 17 ஆண்டுகள் பணிபுரிந்தவர். 69-ல் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து தொடர்ந்து 40 வருடங்களாக கட்சிப்பணி ஆற்றி வருகிறார். 23 வருடங்களாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். சி.ஐ.டி.யு.அகில இந்தியச் செயலாளராக பல வருடங்கள் பணியாற்றியவர், தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக உள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தோம். நிதானமாகவும், தெளிவாகவும் பதில் அளித்தார். அதிலிருந்து....... நீங்கள் பிறந்த சூழல் குறித்தும், கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தது குறித்தும் கூற முடியுமா? வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு மத்தியதர குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய தந்தை ரயில்வே ஊழியராக இருந்தார். வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில் தான். சென்னை விவேகானந்தா கல்லூரியில் தான் பட்டப்படிப்பு முடித்தேன். 1967-ல் ரிசரவ் வங்கியில் பணியில் சேர்ந்தேன். அடுத்த 17 ஆண்டுகள் அங்குதான் பணி. அந்தக் காலங்களில் வங்கிப் பணியை செய்தேன் என்பதை விட தொழி