இடுகைகள்

மே, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க ஜன நாயகம்....

மூத்த மகன் டெல்லியில் அமைச்சராகி விட... அடுத்த மகன் தன்னருகிலேயே துணை முதல்வராகி விட... இளைய மகள் மேல் சபை எம். பி...... பேரனும் பொறுப்பை பெற்று விட... இதற்க்கு மேல் ஒரு தகப்பன் என்ன தான் செய்திட இயலும்... நம்ம தமிழக நன்மைக்காக......

ஆமென்...

நேசிப்பவர்களே பாக்கியவான்கள் எனில் .... உங்களால் நானும் .... என்னால் நீங்களும் ... பாக்கியவான்கள் ஆவோம் ...

கொடு..

தன் ஒளியை இன்னொரு மெழுகுவர்த்திக்கு ஏற்றாத எந்த மெழுகுவர்த்தியும் அணைந்ததற்கே சமம் ....

நாய்களின் அரசியல்....

நாய்களைப்பற்றி நாமெல்லோரும் ஒரேமாதிரி நினைப்பதில்லை நாய்களனைத்தும் ஒரேமாதிரியாய் இல்லாததைப்போலவே குரல்வளையைக் கவ்வும் நாய் குண்டிச்சதையை குதறும் நாய் அபாய அறிவிப்பிலிருக்கும் எலும்பு படத்துக்கே ஜொள்ளொழுக்கும் நாய் சீமாட்டிகள் மடியில் தவழும் சிருங்காரநாய் மாட்டெலும்பு கடித்ததை மறைக்கும் சுத்த சைவநாய் ஒரிஜனல் முனியாண்டிவிலாஸ் நாய் பேட்டைநாய் கோட்டைநாய் வேட்டைநாயென்று வகையெத்தனையானாலும் நன்றியில் ஆட்டுவதாய் நம்பப்படும் வால் பின்பகுதியிலிருக்க கோபத்தில் கடித்துக் குதறும் வாயோ எடுத்தயெடுப்பில் முன்பகுதியிலேயே இருக்கிறது என்பதிலும் வாலாட்ட வேண்டுமானால் குறைந்தபட்சம் தங்கபிஸ்கட்டாவது கொடுத்தாகவேண்டும் கடிப்பதற்கோ காரணங்கள் தேவையற்றதாகிறது அவை நாய்களாக இருப்பதாலேயே என்பதிலும் எல்லா நாய்களுக்கும் இயல்பிலேயே ஒற்றுமையிருக்கிறது அதேநேரத்தில் அரசாங்கம் தண்டிக்கும்போது நீதிமன்றம் காப்பாற்றும் என்று நம்புவதைப்போன்றே ஒருநாய் வெறியில் கடிக்கும்போது அதன் வால்மட்டும் சுயேச்சையாய் ஆடுமென்று நினைப்பதும் முட்டாள்தனமாகும் ஏனென்றால் வேறுவேறு இடத்திலிருந்தாலும் வா

காலம் காத்திருக்கிறது....

வான்வெளியில் கொல்லப்பட்டன அந்தப் பறவைகள் கொலைகாரர்களுக்கு எதிராக நட்சத்திரங்களும் மேகங்களும் காற்றும் கதிரவனும் சாட்சி கூறாவிட்டாலும் அடிவானம் அதற்கு செவிமடுக்க விரும்பாவிடினும் மலைகளும் அருவிகளும் அவற்றை மறந்து விட்டாலும் ஏதேனுமொரு மரம் அக்கொடுஞ்செயலை பார்த்துதானிருக்கும் தன் வேர்களில் அக்கொடியோரின் பேர்களை எழுதிவைக்கத்தான் செய்யும். -கிர்கிஸ்தான் கவிஞர் ஷெர்கோ பெகாஸ்

அகதியாய் போகிறேன்....

இந்த தேசத்தை விட்டும் இங்கேயிருக்கும் தாவரங்களை விட்டும் பூக்களையும் புல் பூண்டுகளையும் விட்டும் மிருகங்களையும் எனக்கு அநியாயம் செய்தவர்களை விட்டும் நான் போகிறேன் எனது இருதயத்திற்கும் உங்கள் இருதயத்திற்கும் தூரமென்று விலக்கிவிட்டீர்களே அதனால் போகிறேன் நான் குளித்த ஒடைகளே கிழிந்த களிசனோடு நான் பிடித்த தும்பிகளே வண்ணத்துப் பூச்சிகளே இந்த காற்றில் கலந்திருக்கும் நல்லவர்களின் சுவாசத்தின் வாசனைகளே நான் போகிறேன் சொந்த தேசத்தில் என்னால் அந்நியனாய் வாழ முடியாது இந்த தேசமும் துரோகிகளும் நாசமாகட்டும் மனம் பத்தி எரியும் சுவாலையில் இவர்களெல்லாம் எரிந்து சாம்பலாகட்டும் இளம் குழந்தைகளின் ஈரல் குலைகளை அயல் தேசத்தில் விற்று வயிறு நிரப்பட்டும் இடிவிழுந்து புயல் அடித்து தூள் தூளாய்ச் சிதறி இந்த தேசம் மண் போல போகட்டுமென்று என்னால் சாபமிட முடியாது எனது நாகரீகம் வேறு நான் போகிறேன் இந்த உலகத்தில் எந்த மூலையிலாவது ஒரு பிச்சைக்காரனாக ஒரு அநாதையாக ஒரு அகதியாக வாழ்ந்து மரணித்து

நம்புங்கள் அவர் ரெம்ப நல்லவர்....

ஒரு வழியாய் மத்திய மந்திரி சபையில் பங்கேற்பது என தி . மு . க . நாட்டு நலன் கருதி முடிவெடுத்து விட்டது . தமிழர்களின் மீது அளவளாவிய பற்றும் பாசமும் கொண்ட தமிழக முதல்வர் தள்ளாத வயதிலும் தமிழ் நாட்டுக்கு நல்லது செய்தே தீருவேன் என்று எவ்வளவு உறுதியாய் இருக்கிறார் என்று நினைக்கையில் மெய் சிலிர்க்கிறது . அழகிரியின் சேவை அகில இந்தியாவுக்கும் தேவை என்று அவர் கண்டு உணர்ந்த பொழுதிலிருந்து அதற்க்காக அவர் பட்ட பாடுகள் சொல்லி மாளாது .. கடும் உடல் நலக்குறைவால் தேர்தல் பிரச்சாரங்களில் கூட பங்கேற்க இயலாமல் போனாலும் , ஓட்டு ஒன்றுக்கு நூற்றி ஐம்பதில் தொடங்கி மதுரையில் இரண்டாயிரம் வரை செலவிட்டு தனது கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து , கடும் முதுகு வலியையும் பொருட்படுத்தாது டில்லி சென்று போராடி , முடியவில்லை என்றவுடன் வெளியிலிருந்து ஆதரவு என அறிவித்து , பதவி ஏற்பு விழாவை புறக்கணித்து , கடைசியில் ஒரு வழியாக மன்மோகன் சிங் வேண்டி விரும்பி கேட்டு கொண்டதற்கு இணங்க இப்போது மந்திரி சபையில் பங்கேற்பது என எடுக்

இனி.....

தொடரும் நிகழ்வுகள் அனைத்தும் நாம் எவ்வளவு பலகீனமாய் இருக்கிறோம் என அறைந்து அறிவிப்பதாகவே உணர்கிறேன் ... இங்கு நான் பயன்படுத்தும் நாம் என்ற வார்த்தை " மானுட மாற்றத்திற்காக போராடும் சமூகத்தையே ..." இந்தியாவில் மன்மோகன் சிங் பிரதமராகிறார் ... ப . சிதம்பரம் வெற்றி பெற வைக்கப் படுகிறார் .. இதை ஏதோ வெறும் தேர்தல் முடிவாக மட்டும் கடந்து போக இயலவில்லை .. ஏன் எனில் வெறுமனே காங்கிரஸ் இன் வெற்றியாக மட்டும் இது இல்லை .. எந்த இடையூறும் ஐந்து ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ற்கு இருந்து விட கூடாது என்ற கவனம் இருக்கிறது ... இடது சாரிகளின் மிக மோசமான தோல்வியாகவும் இது இருக்கிறது . ஆகவே இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் வல்லியதாகவும் கம்யூனிஸ்ட் கள் வலுவற்றும் இருக்க வேண்டிய நிர்பந்தத்தின் வெளிப்பாடு மட்டுமேயன்றி வேறில்லை .... ஏன் காங்கிரஸ் வலுப்பெற வேண்டும் ..? அல்லது ஏன் கம்யூனிஸ்ட் கள் வலுவிழக்க வேண்டும் ..? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பின்னால் இருக்கும் சூட்சுமம் ஒற்றை புள்ளியை நோக்கி நகர்கிறது ... அந்த சூட்சுமம் கட

காதல்

எவரெஸ்டை விடவும் உயர்ந்ததில்லை என் காதல் .... ஆனால் .... நீங்கள் உயர்வானது என சொல்லும் எவன் காதலுக்கும் குறைவனதுமில்லை ...... .. ...

பயணம்

நகர்ந்து கொண்டே இருக்கின்றன நட்சத்திரங்கள் ..... ஏழு கடல்கள் ... ஏழு மலைகள் .... கடந்தேனும் உன்னை விடவுமோர் உலக பேரழகியை அடையாளம் காணும் அவசரத்தில் ..... நகர்ந்து கொண்டே இருக்கின்றன நட்சத்திரங்கள் .......