இடுகைகள்

அக்டோபர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மறுபடியும் போராட்டம்...

கல்வி இல்ல... வேல இல்ல... கவர்மெண்டு சலுக பெற ரேசன் கார்டும் கையில் இல்ல... அப்ளிகேசனோட போனா அது இல்ல இது இல்லன்னு அலைய விட்டே ஆயுச முடிச்சுடுரானுங்க... காரணம் வேணாம் எங்களுக்கு... கார்டு தான் வேணும்னு சொல்லி மனு கொடுக்கும் போராட்டம் அறுபது நாளில் தரலேன்னா அவசியம் இருக்கு... .. மறுபடியும் போராட்டம்.. டி.ஒய்.எப்.ஐ. போராட்டத்திற்காக எழுதியது

சே எனும் சிப்பாய்....

அக்டோபர் - ஒன்பது.. காற்றின் வெளிகளில் திசைகளற்று..., எல்லைகளற்று... ஒட்டு மொத்த மானுட விடுதலையை இலக்காக்கி திரிந்த அந்த பறவை கோர பசி கொண்ட ஏகாதிபத்தியம் எனும் அரக்கனின் துப்பாக்கி ரவைக்கு பலியான தினம்... அய்யகோ பாவம்... அரக்கனின் ஆசை நிராசையாகி போனது... அந்த பறவை மீண்டும் மீண்டும் எழுகிறது... உலகெங்கும் இருந்து ஆயிரமாயிரமாய்... ஏகாதிபத்தியம் இப்போது புரிந்திருக்கும்... அன்று சுட்ட துப்பாக்கி அவனை நோக்கி அல்ல.. தன்னை நோக்கி திரும்பி இருந்ததை... அக்டோபர் 18ம் தேதி கியூபாவில் ஒரு மிகப் பெரிய அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. மார்ட்டியின் நினைவுச்சின்னத்திற்கு கீழே மேடை போடப்பட்டிருந்தது. பிடல் காஸ்ட்ரோ, உதவி பிரதமர் ரால் காஸ்ட்ரோ, அதிபர் டோர்ட்டிகாஸ், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆர்மண்டோ ஹார்ட் மற்றும் அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள். லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு திரண்டிருந்தார்கள். கியூபாவின் கொடிகள் அரைக்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. கியூப கவிஞர் நிக்கோலஸ் கியுல்லன் சேகுவாராவிற்கு அஞ்சலி செலுத்தி கவிதை வாசிக்க நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. பிளாசாவின் பெரிய திரையில், ம

காற்றின் வெளியிடை கண்ணம்மா.....

"எனக்கு சம்மதமே.. மாலையாக இருந்தால் மலராக மட்டுமல்ல... நீ பாலையாக இருந்தால் மணலாக கிடக்கவும்..." நிச்சயம் வைரமுத்து எழுதிய இந்த கவிதை நினைவிருக்கும் உனக்கு... ஒரு வேலை இப்போது நினைவில்லை என நீ பொய் சொல்ல முயலலாம்... முயற்சிக்காதே முடியாது உன்னால்... உனக்கு நான் எழுதிய முதல் காதல் கடிதத்தில் இடம் பெற்ற கவிதை... ஆம் அப்போது நீ மாலையாக இருந்தாய் நான் மலராக இருந்தேன்.. இப்போது நீ பாலையாக... நான் இல்லை நம் காதல் மணலாக......