இடுகைகள்

ஜூன், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆண்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள், மனிதர்கள் வேறுபாதையில் செல்லவும்....

படம்
1. காலந்தோறும் போர்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன. தேசியப் பெருமிதம், இனமானம், வீரம், எல்லை விரிவாக்கம், கௌரவப்பிரச்னை என்று போருக்கான காரணங்களை ஆட்சியாளர்களும் ஆள விரும்புவோருமே உருவாக்குகின்றனர். உன்னத இலட்சியம் அல்லது அற்பமான கற்பிதம் என்ற இருபுள்ளிகளுக் கிடையே அலைவுறும் எதுவொன்றையும் போருக்கான காரணமாக கட்டமைத்து விட முடிகிறது அவர்களால். உண்மையில் அவர்கள் இருவேறு முகங்கள் கொண்ட ஒருவரே தான். சுண்டிவிடப்படும் நாணயத்தில் பூவோ தலையோ எது விழுந்தாலும் அது போரை தொடங்குவது அல்லது தொடர்வதற்குரிய சமிக்ஞை யாகவே அவர்களது அகராதியில் பொருள் விளக்கம் உள்ளது. எனவே காலமும் களமும்தான் மாறுகிறதேயன்றி போரை அவர்கள் கைவிடுவதாயில்லை. ஆயுதங் களின் மீதான ஈர்ப்பு தவிர்க்கவியலாதபடி தம்மை மனிதவுயிர்கள் மீதான வெறுப்புக்குள் நெட்டித்தள்ளுவதை ஒருபோதும் அவர்கள் உணர்ந்தாரில்லை. முகமும் இருதயமுமற்ற ஆயுதங்களின் முனையில் வழியும் ரத்தத்தால் நிறைகிறது அவர்களது கோப்பை. சொந்தமக்களின் நாவும் குரலுமே போர்க்கடவுள் கோரும் முதற்படையல். எனவே போரின் நோக்கம் எதுவாயினு

செம்மொழி மாநாடு- வரவேற்பும் எதிர்பார்ப்பும்!

-ச.தமிழ்ச்செல்வன் பெரும்பொருட்செலவில் கோவையில் கோலாகலம் என்ற சொல்லுக்குப் புதிய பொருள் தரும் விதமாகத் தமிழக அரசு நடத் தும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு துவங் கிவிட்டது.பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதுமிருந்து வந்து கோவையில் குவிந்துள்ளார்கள்.வெளிநாடுகளிலிருந்தும் பல தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டுக்கு வரு கை புரிந்துள்ளனர்.கோவை மாநகரில் திரும் பும் இடமெல்லாம் மாநாட்டுத் தோரணங்கள், சுவர் ஓவியங்கள் எனக் கோவைத் தெருக் களில் எங்கும் தமிழ் முழக்கம். அந்த மகிழ்ச் சியில் நாமும் பங்கு கொள்கிறோம். கூடும் மக் கள் ஏதோ ஒருவிதமான தமிழ் உணர்வில் தான் கூடுகிறார்கள். வேடிக்கை பார்க்க மட் டும் அல்ல என்றே நம்புகிறோம். “இவ்வளவு ஆடம்பரமும் செலவும் தேவைதானா” என்று 1968இல் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் சென்னை யில் இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு நடந்த போது தந்தை பெரியார் கேட்டார். உலகத்தமிழ் மாநாடென்றால் மொழியின் பல்வேறு துறைக ளில் நடைபெறும் ஆய்வு மாநாடாகத்தானே இருக்க வேண்டும். எதற்கு இந்த ஆடம்பர மான வீண் செலவு என்பதுதான் தந்தை பெரி யாரின் கேள்வி.ஆனால் மக்கள் மயப்படுத்தப் பட

நக்சல்பாரிகளிடம் கொள்கைத் தெளிவு இல்லை: உ.ரா.வரதராஜன்

படம்
நேர்காணல்: மினர்வா & நந்தன் கல்லூரிக் காலத்திலேயே அரசியல் ஈடுபாடு கொண்டவர். ரிசர்வ் வங்கியில் 17 ஆண்டுகள் பணிபுரிந்தவர். 69-ல் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து தொடர்ந்து 40 வருடங்களாக கட்சிப்பணி ஆற்றி வருகிறார். 23 வருடங்களாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். சி.ஐ.டி.யு.அகில இந்தியச் செயலாளராக பல வருடங்கள் பணியாற்றியவர், தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக உள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தோம். நிதானமாகவும், தெளிவாகவும் பதில் அளித்தார். அதிலிருந்து....... நீங்கள் பிறந்த சூழல் குறித்தும், கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தது குறித்தும் கூற முடியுமா? வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு மத்தியதர குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய தந்தை ரயில்வே ஊழியராக இருந்தார். வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில் தான். சென்னை விவேகானந்தா கல்லூரியில் தான் பட்டப்படிப்பு முடித்தேன். 1967-ல் ரிசரவ் வங்கியில் பணியில் சேர்ந்தேன். அடுத்த 17 ஆண்டுகள் அங்குதான் பணி. அந்தக் காலங்களில் வங்கிப் பணியை செய்தேன் என்பதை விட தொழி

ஒளி ஓவியம்...

படம்
என் அன்பு தோழனின் ஒளி ஓவியங்கள் இவை ... வாய்ப்பு இருந்தால் வாழ்த்துங்கள் ...

ஜூன்20, உலக அகதிகள் தினம் சொந்த நாட்டிலேயே அகதிகளாய் மாறிய அபலைகள்

- தாஸ் ஐ.நா. அகதிகள் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் விளக்கம் கூறுகிறபடி, அகதி என்று அழைக்கப்படும் நபர், துன்புறுத்தல், யுத்தம் அல்லது மோதல் ஆகியவற்றின் காரணமாக சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டவர் ஆவார். இனம், மதம், தேசவழி, அரசியல் மற்றும் சமுதாய குழுக்கள் காரணமாக நாட்டை விட்டு விரட்டப்பட்ட நபரால் மீண்டும் தனது நாட்டுக்கு திரும்ப முடியாத நிலைமை ஏற்படும்போது, அவர் மற்றொரு நாட்டில் அகதியாகக் கருதப்படுவார். இவர்கள் சர்வதேச அகதிகளாவர். உள்நாட்டு அகதிகள் பற்றி ஐ.நா. அக திகள் அமைப்பு எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் இதுபற்றி ஐ.நா.வின் ஆயிரமாண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “1990 ம் ஆண்டுக்குப் பின் நடந்த யுத்தங்கள் அனைத்துமே உள்நாட்டு யுத்தங்கள்தான். கொடூரமான இந்த யுத்தங்கள் சுமார் 50 லட்சம் உயிர் களைப் பறித்துள்ளன. மக்களின் உரி மைகளை அவை மீறிய அளவுக்கு தேசங் களின் எல்லைகள் மீறப்படவில்லை. மனிதநேய மரபுகள் வழக்கம் போல் மிதிபட்டு வருகின்றன. பொதுமக்களும், உதவி குழுக்களும் கேந்திரமான இலக்கு களாக மாறிவிட்டன. அவை, சிறுவர்க ளைக் கூட கொலைகாரர்களாக மாற்றி விட்டன” என்ற

தமிழால் என்ன பயன்? தமிழன் கேட்கிறான்

- அருணன் - செம்மலர் ஜூன்10 - (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சென்னையில் மே 22 அன்று நடத்திய "செம்மொழித் தமிழுக்குச் செய்ய வேண்டியது என்ன?" என்பது பற்றிய மாநிலக் கருத்தரங்கில் இச்சங்கத்தின் தலைவர் அருணன் ஆற்றிய தலைமை உரை) உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23-27 தேதிகளில் நடக்கப் போகிறது. இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது. மாநாட்டு ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக நடந்து வருவதாக நாளும் செய்திகள் வருகின்றன. நமக்கெல்லாம் மகிழ்ச்சியே. தமிழுக்கு மாநாடு எனும் போது தமிழ் உள்ளங்கள் எல்லாம் மகிழத்தான் செய்யும். உண்மை. கடந்த ஆண்டு இதே மே மாதத்தில்தான் இலங்கையில் யுத்தம் தனது உச்சமான கோரமுகத்தைக் காட்டியது. குறிப்பாக, முள்ளிவாய்க்கால் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். நமது இதயங்கள் ரத்தக்கண்ணீர் வடித்தன. யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டதாக இலங்கை அரசு குதூகலத்தோடு அறிவித்தது. ஆனால் யுத்தம் முடிந்து ஓராண்டான பிறகும் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படவில்லை. பலாத்காரத்தால் எட்டப்படும் வெற்றி தற்காலிகமா