இடுகைகள்

ஜூலை, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்னோடென் - அமெரிக்காவை அலற வைத்தவர்.

படம்
இது   ஒருவரின்   பெயர் .   இவர்   புரட்சிகாரர்   இல்லை .   கம்யுனிஸம்   பேசவில்லை .   எந்த   நாட்டின்   விடுதலைக்காகவும்   குரல் கொடுக்கவில்லை .   ஆனால்   அனேகமாய்   ஒரு   தனி   மனிதனை   அமெரிக்கா   கொலைவெறி   கொண்டு   தேடும்   முதல்   நபர் இவர்தான் .   இந்த   தனிமனிதனுக்கு   எதிராக   சீனா,   ரஷ்யா   போன்ற   வளர்ந்த   நாடுகளை   மிரட்டும்   அளவுக்கு   அமெரிக்கா சென்றுள்ளது . வேறொன்றுமில்லை. கொஞ்ச   நாட்களுக்கு   முன்பாக   விக்கிலீக்ஸ்   இணையதளம்   எப்படி   அமெரிக்காவின்   ரகசியங்களை வெளியிட்டதோ   அதே   போல   இவரும்   ஒரு   தகவலை   வெளியிட்டார். அவ்வளவு   தான். ஆனால்   அந்த   ஒற்றைத் தகவலுக்குள்   ஒளிந்திருக்கிறது   உலகின்   சர்வாதிகாரி   யார்   என்பதற்கான   பதில். உலகில்   பெருகி   வரும்   சமூக   வலைதளங்களில்   செயல்படும்   ஒவ்வொரு   தனிமனிதனையும்   அமெரிக்க   உளவுத்துறை கண்காணித்து   வருகிறது   என்பதே   அந்த   தகவல். சும்மா   இருக்குமா   சர்வதேச   சண்டியர்   அமெரிக்கா…?? சல்லடை   போட்டு   சலிக்கிறது   உலகை. ஸ்னோடென்னுக்காக. ஒளித்து   வைத்திருந்தால்   கடும்   விளைவுகளை