இடுகைகள்

ஜூன், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாம் வெல்வோம்........

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்விகள் ஏற்படுத்திய வடுக்கள் ஆற தொடங்கி இருக்கிறது... தோல்வியை தோல்வியாகவே ஒப்புக் கொண்டு படிப்பினை பெற்று முன்னேறுவோம் என தோழர்.பிரகாஷ் காரத் சொன்னது மட்டுமே மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்து கொண்டு இருக்கிறது... இந்த ஆண்டுக்கான இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர் சேர்ப்பு பணிகள் தொடங்கி உள்ளது... இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.. இது வரை நடந்த பதிவு எண்ணிக்கையை முறியடிக்க வேண்டும்.. புதிய பகுதிகளுக்குள் வாலிபர் சங்க உறுப்பினர் அட்டையை கொண்டு சேர்க்க வேண்டும்... வெறும் உறுப்பினர் சேர்க்கும் பணியாக மட்டுமின்றி... ஆயிரமாயிரம் மனிதர்களை சந்திக்கும் பெரும் வாய்ப்பை இந்த இயக்கம் அளிக்கும்... ஊழியர்களே இல்லை எனினும் அவர்கள் கூட்டம் கூட்டமாகவே உள்ளனர் என்ற தோழர்.லெனின் அவர்கள் உரைத்த நிஜத்தை நம் காண போகிறது... முன்னேறுவோம்... வெற்றி பெறுவோம்... நாம் வெல்வோம் ஓர்நாள்.........
மாவோயிஸ்ட்டுகள் என்ற பெயரில் மரணத்தின் தூதுவர்கள் - ஜார்க்ரம் (மேற்குவங்கம்), ஜூன் 25-அபிஜித் மகதோ என்ற அந்த மாணவ னின் உடலிலிருந்து கொட்டிய ரத்தமும், அவனை சரமாரியாக சுட்டபோது விழுந்து தெறித்த கண்ணாடியின் துகள்களும் மண் ணோடு மண்ணாக கலந்து காய்ந்துக் கிடக் கின்றன.ஜூன் 17.காலைப் பொழுதில், இந்த மாணவனை தங்களது எதிரி என்று தீர்மானித்த அவர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டுக் கொன் றனர்.கல்லூரிக்கு போய்விட்டு திரும்பி வரு வதற்குள் தங்களது குடும்பத்தினரும், கிரா மத்தைச் சேர்ந்த மக்களும் ஆயுத முனையில் ஊரை விட்டு விரட்டப்பட்டதால், அங்கிருந்து டிராக்டர்களில் ஏறி காரக்பூர்- ராஞ்சி நெடுஞ்சாலையில் அச்சத்துடனேயே வந்துக் கொண்டிருந்ததை பார்த்து, அவர்களோடு சேர்ந்து கொண்டார் அபிஜித் மகதோ. அன்று இரவு முழுவதும் சக தோழர்களோடு கண்விழித்து தனது கிராமத்து மக்களுக்காக கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட மகதோ, தனது சக நண்பர்கள் அனில் மகதோ, நீலா தர் மகதோ ஆகியோருடன் அருகில் இருந்த கடையில் தேநீர் குடித்துக் கொண் டிருந்தார்.இவர்களை தேடி ஆறு மோட்டார் சைக் கிள்களில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுடன் வந்த அவர்கள், வாகனங்களிலிருந
நீங்கள் அவர்களைப் பார்த்திருக்கக் கூடும்! நீங்கள் அவர்களைப் பார்த்திருக்கக் கூடும்.எதாவது ஒரு கோவில் முன்பாகவோபள்ளிக்கூடம் அருகிலோபேருந்து நிறுத்தங்களிலோசிலநேரம் உங்கள் தெருக்களிலோ கூடநிச்சயமாய் பார்த்திருக்கக் கூடும்.எங்கிருந்தாலும் மண்ணோடுதான் இருக்கிறார்கள், வாழ்கிறார்கள்.மக்கிப்போன கந்தல் ஆடைகளைச் சுற்றியபடிகுளிக்காமல் சிக்குப் பிடித்த முடிகளோடுநாற்றமெடுக்கும் அவர்களைப் பார்த்துமுகம் சுழித்து விலகிப் போயிருக்கவும் கூடும்.வான் நோக்கி சிரித்தபடி ஓடுகிறார்கள்காற்றோடு சதாநேரமும் கதை பேசுகிறார்கள்எல்லோரிடமும் கைநீட்டி நிற்கிறார்கள்யார், எப்படி, எது, என்ன, எங்கு, எப்போதுஎன ஆரம்பித்து எதாவது ஒரு கேள்விஅவர்களைப் பற்றி எழுந்திருக்கிறதா?பிரக்ஞையற்ற அவர்களின் அந்தரங்க அவயங்கள்உங்கள் பார்வையில் பதிந்திருக்கக் கூடும்காமம் வெளியேறிய உடலா அதுஒருகணம் யோசித்திருக்கிறீர்களா?அவர்களையும் ஒருதாய் வலியோடு பெற்றிருப்பாள்நம்மைப்போலவே தவழ்ந்து, எழுந்து, நடந்திருப்பார்கள்சின்னதாய் ஒரு சினேகமோ நெருக்கமோ என்றைக்காவது வந்திருக்கிறதா?

அடியோடு ஒழிப்போம் அடிக்கும் வழக்கத்தை...

வலைத்தளப் பதிவொன்றில் ஒரு பெண்மணி ஒரு சுவாரசியமான செய்தியைக் குறிப்பிட்டிருந்தார். ஒரு மூன்று மாதம் மட்டும் தனியார் துவக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்த அனுபவம் அதில் முக்கியமானது. அவர் வகுப்பறையில் நுழைந்த மாத்திரத்தில் குழந்தைகள் சுற்றிச் சூழ்ந்து கொண்டு, டீச்சர், டீச்சர் என்று குதூகலித்துக் கூவுவார்களாம். ஒரே பாட்டும் சத்தமும் பறக்குமாம் வகுப்பில். மற்ற ஆசிரியைகள், சரிதான் அந்தப் புதுக் கிறுக்குடைய வகுப்பாகத்தான் இருக்கும், என்ன வேண்டிக் கிடக்கிறது வகுப்பறைக்குள் கும்மாளம் என்று அலுத்து சலித்துக் கொண்டு நகர்வார்களாம். இந்தப் பெண்மணி ஒருநாள் அந்தக் குழந்தைகளிடம் நேரே கேட்டிருக்கிறார், ஏன் என்னைக் கண்டால் மட்டும் இத்தனை உற்சாகமாக இருக்கிறீர்கள் என்று.....அந்த இளந்தளிர்கள் ஒரே குரலில் சொன்ன பதில் என்ன தெரியுமா: 'வகுப்பறைக்குள் கையில் குச்சி இல்லாமல் நுழையும் ஒரே ஆசிரியை நீங்க தானே மிஸ்' என்பதுதான். Teacher கோலெடுத்தால் குரங்காடும் என்பதுதானே பழமொழி - குழந்தைகளுக்கு எதிராகக் கோலாட்டம் என்ன வேண்டியிருக்கிறது? ஆசிரியை என்பவர் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள

அஞ்சலி.....

படம்
கமலாதாஸ் என்றும் மாதவிக்குட்டி என்றும் மாதவிசுரய்யா என்றும் அறியப்பட்ட -- மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் /கதைகள் எழுதிய என் பிரியத்துக்குரிய மூத்த படைப்பாளி - என் இளமைக்காலத்தின் அடையாளங்களில் ஒன்றாக என் வாழ்வோடு இரண்டறக்கலந்திருந்த கமலாதாஸ் கடந்த 31 ஆம் தேதி புனேயில் காலமாகிவிட்டார் என்கிற செய்தி என்னைப் பெரும் துயரில் ஆழ்த்திவிட்டது(இந்த வரிக்கான உண்மையான அர்த்தத்தில்). 1974இல் நான் ராணுவத்தில் இருந்தபோது இமயமலையின் சரிவுகளில் கவிதைகளோடு துள்ளித்திரிந்த பருவத்தில் கமலாதாசை நான் கண்டடைந்தேன். “ மூன்று மொழிகளில் பேசுகிற-இரண்டு மொழிகளில் எழுதுகிற ஆனால் ஒரே மொழியில் கனாக் காண்கிற ” அந்தப் பெண்மணியின் கவிதைகள் தாம் நான் முதலில் வாசித்தது. ஜெயகாந்தனும், நா.பார்த்தசாரதியும் படித்துக்கொண்டிருந்த அந்த நாளின் என்னைத் தலைகீழாகக் கவுத்திப் போட்டன கமலாதாசின் எழுத்துக்கள்.தொடர்ந்து அவருடைய ‘ My Story’ படித்தேன்.அவர் எழுத்துக்களின் மீது பித்தானேன். அவரைப்போன்ற நேர்மையான ஓர் எழுத்துக்காரரை இந்தியாவில் நான் இதுவரை கண்டதில்லை.என்ன நேர்மை.என்ன ஒரு துணிச்சல்.எல்லாமே அதன் உச்சத்தில்.ப

தேர்தல்......

அழகிரியார் மாவட்டத்தில் நாடாளுமன்றத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததும் அதற்கான விஞானப்பூர்வமான ஏற்பாடுகளைச் செய்து ஒரு புதிய தொழில்நுட்பத்தை அண்ணன் உலகுக்கு அளித்ததும் அனைவரும் அறிந்த பழைய செய்திகள். இப்போது மேலும் மேலும் பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.அவற்றில் என் மனதைத் தொட்ட ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்கிறேன். அநேகமாக அழகிரி மாவட்டத்தின் 70 சதவீத வாக்காளர்களுக்கு கவர் பெண் போலீசார் மூலமும் மற்றும் பொருத்தமான அரசுத்துறை நபர்கள் மூலமும் (effective use of govt machinery – இதில் 60 ஆண்டு ஆல் இண்டியா அனுபவம் உள்ள காங்கிரசெல்லாம் அண்ணனிடம் பிச்சை வாங்க வேண்டும்) போய்ச்சேர்ந்துள்ளது.சத்தமில்லாமல் எல்லோரும் வாங்கிக்கொண்டார்கள்.வாங்க மறுத்தால் அண்ணனுக்கு எதிர் வாக்கு என்று அடையாளப்படுத்தப்பட்டுவிடும் அபாயம் கருதியும் பலர் மறுக்கவில்லை.மார்க்சிஸ்ட் ஊழியர்கள் குடியிருக்கும் பகுதிகளில் யாருக்குமே பணப்பட்டுவாடா நடக்கவில்லை.பிடிபடும் அபாயம் இருந்ததால்.அதன் காரணமாக சனியன் போல இவன் ஒருத்தன் இங்க வந்து குடியிருக்கான் பாரு. அண்ணன் மூலம் நமக்குக் கிடைக்க வேண்டிய ‘பெனிபிட்’ எதுவும் கிடைக்காமப் போகுது ப

மம்தா, கவாய், கலைஞர்: மாநில உரிமை, சுயமரியாதை............

மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய - விரிவுபடுத்த வேண்டிய காலகட்டம் இது. மக்கள வைத் தேர்தல் முடிவுகளும் அதையே உணர்த்து கின்றன. அந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக இருப்பினும், வாக்குவிகிதத்தை அதிகம் பெற்றிருப் பது மாநிலக் கட்சிகளே. காரணம், மாநில உரிமை களை, நலன்களைப் பேணுவதில் மக்களோடு இக்கட்சிகள் நெருக்கமாக இருப்பதே. ஆனால், மத்திய ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சியான காங்கிரஸ் இதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் தனது பிறந்தநாளன்று ‘மாநில உரிமைக்காக’ தமிழக முதல்வர் உறுதியேற்றதும், தொடர்ந்து அதுகுறித்துப் பேசி வருவதும் வரவேற் கத்தக்கது. மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் இழைக்கப்படும் பாரபட்சம் குறித்து திமுக, அதிமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கொடுத்துள்ள மனுக்க ளில் மாநில உரிமை என்பதே அடிநாதமாக இருக் கிறது. பேராசிரியர் மு. நாகநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, முதல்வரிடம் அளித்த தனது அறிக்கையில் மாநில உரிமைகள் குறித்து சில பரிந் துரைகளை அளித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. தமிழக அரசின் சார்பிலும், திமுக சார்பிலும் முத லமைச்சர் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கிற போது ஜனநாயக இயக்கங

சுயாட்சி.....?!

எப்போதெல்லாம் அவருக்கு தேவைப் படுகிறதோ அப்போதெல்லாம் அவர் மாநில சுயாட்சி கோசத்தை கையில் எடுப்பார்... எப்போதெல்லாம் அவருக்கு நினைத்தது நினைத்த படி மத்தியில் நடந்து விடுகிறதோ அப்போதெல்லாம் அந்த கோசம் பின்னுக்கு போய் விடும்...... இப்போது மீண்டும் கிளம்பி இருக்கிறது.... மகனை துணை முதல்வராக்கிய பின்னணியில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்டு விடக் கூடாது என்ற அச்சத்தின் வெளிப்பாடாக கூட இது இருக்கலாம்....

எழுந்து வருவோம்.......

எல்லாம் அமைதியாக இருக்கிறது ... காற்றின் வெளிகளில் அவர்களின் ஓலம் மட்டுமே வியாபித்து இருக்கிறது .... நாங்கள் தோற்றுப் போனதாய் அதிகாரம் அறிவித்த பிறகு அதிகமாய் கேட்க முடிகிறது அந்த ஓலத்தை .... எதற்கெல்லாம் நாங்கள் இடைஞ்சலாய் இருந்தோமோ அதுவெல்லாம் இனி வேகமாய் வெளிச்சம் பெரும் ..... நம்பிக்கையை தவிர எதுவுமில்லை இப்போது எங்களிடம் .... நம்பிக்கைகளில் இருந்து எப்படி எழுவது என எங்களுக்கு தெரியும் .. எழுந்து வருவோம் ... கவனமாய் காத்திருங்கள் ... அறுபட போவது உங்கள் சங்காக கூட இருக்கலாம் ... .

நன்கொடையா இது....? வன்கொடை அல்லவோ....!

இது கல்வியாண்டு தொடங்கும் சீசன். தொலைக்காட்சிகளிலும் நாளேடுகளிலும் தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளின் விளம்பரங்கள் வந்து பாய்கின்றன. அந்த விளம் பரங்களில் சொல்லாமல் மறைக்கப்படுவது - கல்விக்கட்டண வழிப்பறியையும், நன்கொடை வசூலையும்தான்.நன்கொடை என்றால் ஒருவர் தானாக முன்வந்து அளிக்கிற நிதியுதவி என்பதைப் பழங்கதையாக்கி, தனியார் கல்வி வியாபார நிறுவனங்கள் அதையும் கட்டாயப்படுத்தியே வசூலிக்கின்றன. இவ்வளவு தொகை தர வேண்டும் என்று நிர்ணயித்துக் கேட்கின்றன. அதில் பைசா குறைந்தாலும் சேர்க்கை அனுமதி கிடைக்காது என்று அச்சுறுத்துகின்றன. கட் டணமாகச் செலுத்தும் பணத்தில் பாதித் தொகைக்காவது ரசீது கிடைக்கும், நன்கொடை யிலோ எந்த ஒரு சான்றும் கிடைக்காது. இந்தப் பின்னணியில்தான், ‘டைம்ஸ் நவ்’ ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம், தனது நிருபர்களை மாணவர்களைப் போல் அனுப்பி, தமிழகத் தலைநகரில் இரண்டு பெரும் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் கட்டண, நன்கொடை கொள்ளையை காட்சிப்பதிவாகவே அம்பலப்படுத்தியுள்ளது. ஒரு நிறுவனம் தொழில திபர் வெங்கடாச்சலத்தால் நிறுவப்பட்ட, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழகமாகும். பாலாஜி மர

அரசியல் - இன்றும் தொடரும் இழிவு....

இந்தியச் சமூகத்தில் நிலவும் சாதிய பாலின ஒடுக்கு முறை தலித்துகள், பழங்குடியினர், பிற்பட்டோர், பெண் கள் யாவரையும் சொத்தும் கல்வியுமில்லாது தாழ்த்தி விட்ட நிலையில் சொத்தும் கல்வியும் உள்ளவர்களே வாக்காளராக முடியும் என்ற நிபந்தனையை முன்னிறுத் துவது மோசடியானது என்று அம்பலப்படுத்திய அம்பேத்கர், வயது வந்தோர் யாவருக்கும் வாக்குரிமை என்பதே மக்களாட்சியின் அடிப்படை என்றார். வாழ் வுரிமை யாவும் மறுக்கப்பட்ட கடைக்கோடி மனிதர் களின் கையில் வாக்குரிமையாவது ஒரு ஆயுதமாக இருக்கட்டும் என்பதே அவரது நோக்கம். ஆனால் இன்று அந்த கடைக்கோடி மனிதர்கள் தமது வாக்குரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு அருகி வருகிறது. சமூக அங்கத்தவர் என்ற முறையில் அவர்களுக்குள்ள பிறவுரிமைகளை தட்டிப் பறித்ததைப் போலவே அவர்களது வாக்குரிமையையும் தட்டிப் பறிக்கும் சூதுகளின் களமாக மாறிவருகிறது தேர்தல். காசுக்கு கிடைக்கும் ஒரு பண்டத்தைப்போல வாக்காளர் களை அணுகத் துணிகிற கும்பல் கலாச்சாரம் அரசியலில் பெருகி பணபலம், வன்முறை, ஊடக வலு மூலமாக வாக்குரிமையின் நோக்கங்களைச் சிதைக்கிறது. தேர்தல் களத்திலிருந்து கொள்கை சார்ந்த விவாதங்களை பலவந்தமாக வ

Accused Number One: Narendra Modi, CM Of Gujarat

VILLAIN OF THE PIECE This is the moment all those eagerly hoping for justice to be done for the victims of Gujarat pogrom have been waiting for. The Special Investigation Team (SIT) appointed by the Supreme Court to look into the alleged role of Gujarat chief minister Narendra Modi in the 2002 Gujarat riots has begun its work. The SIT team led by its chief R K Raghavan had its first interaction on May 26, 2009 with Ms Zakia Jafri, on whose complaint the Supreme Court had given its direction to SIT. Ms Jafri is the widow of former Congress MP Ehsan Jafri, who was also killed in the riots at Gulbarg Society in Ahmedabad. According to a report in The Asian Age (May 27, 2009) SIT chief did not rule out questioning Gujarat chief minister Narendra Modi in this regard. "I don’t rule out anything at all," he said when asked whether his team would question Modi. "We had our first interaction with the lady (Ms Jafri) to find out what happened on the day of the riots

முதல் பெண் சபாநாயகர் - சந்தோஷமும், வருத்தங்களும்...

மிக முக்கியமான ஒரு செய்தியாக இன்று பேசப்படுகிறது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண், மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் ஒரு தலித் என்பது இந்த நிகழ்வை மேலும் சந்தோஷத்துடன் உற்று நோக்க வைத்திருக்கிறது. ஆரவாரத்துடன் கொண்டாடப்பட வேண்டிய தருணம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் கண்முன்னே நாம் பார்க்கும் யதார்த்தங்கள் கசப்பானவை. அவை உண்மையானவை. சபாநாயகர் பெயருக்கு மாண்புமிகு மீராகுமார் அவர்கள் ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒத்த கருத்தோடு, மக்களவையின் இந்த நடவடிக்கையில் சேர்ந்து நின்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும், இதேபோல் ஒன்றுபட்டு நின்று பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீட்டை மக்களவையில் ஏகமனதாக நிறைவேற்ற முன் வருவார்களா? இல்லையென்பதுதான் கடந்தகாலத்தின் வருத்தமான வரலாறு. அணுசக்தி உடன்பாட்டிற்காக, அத்தனை சித்துவேலைகளும் செய்து, மக்களவையில் பெரும்பான்மை திரட்டிய காங்கிரஸ், மகளிர் சக்திக்காக திறந்த மனதுடன் என்ன காரியம் ஆற்றியிருக்கிறது? அந்தத் தீர்மானம் கொண்டு வரும் நேரத்தில் மட்டும், கட்சி

ஆர்டர்.... ஆர்டர்.....

கேரளாவில் போக்குவரத்து அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வந்த சுபையர் என்பவர் ரூ.25/- (ருபாய் இருபத்தைந்து மட்டும்) லஞ்சம் பெற்றதாக 1989ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் நீதிமன்றம் அவருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தது. இதனை கேரள உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது. போதிய ஆதாரங்களும், சாட்சியங்களும் இல்லையென 20 வருடம் கழித்து இப்போது தீர்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆர்டர்..... ஆர்டர்....!